தடகளப் போட்டியில் சிறப்பிடம்: கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

திருவள்ளுவர் பல்கலைக்கழக வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை

திருவள்ளுவர் பல்கலைக்கழக வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், வேலூர், கடலூர் மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. வேலூர் மாவட்டம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவி எஸ்.சிந்தாமணி 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். இதே மாணவி 400 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் மூன்றாமிடம் பிடித்தார்.
மாணவி வி.சந்தியா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார். வி.பூர்ணிமா நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பிடித்தார். பி.அர்ச்சனா 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் மூன்றாமிடம் பிடித்தார்.
இதுதவிர 400 மீட்டர் தொடர் ஓட்டம், 1,600 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் மாணவி பி.அர்ச்சனா இரண்டாமிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார். மாணவி எஸ்.சிந்தாமணி திருவள்ளுவர் பல்கலைக்கழக தடகள அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இவர், வரும் 12 முதல் 16-ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். போட்டியில் வென்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.
பழனி, செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் எம்.கோபி, ஆர்.மீரா 
மற்றும் பேராசிரியர்கள் வியாழக்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com