நிரம்பி வரும் போளூர் பெரிய ஏரி: ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்

போளூர் பெரிய ஏரி நிரம்பி வரும் நிலையில், இந்த ஏரியை ஏராளமான பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

போளூர் பெரிய ஏரி நிரம்பி வரும் நிலையில், இந்த ஏரியை ஏராளமான பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
போளூரில் 490 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தற்போது 138.4 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரி மூலம் சுமார் 1,110 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரிக்கு 2 மதகுகள் உள்ளன. இவற்றில் ஒரு மதகின் வழியாக நீர் மறுகால் பாய்ந்தால் சனிக்கவாடி அருகே செல்லும் செய்யாற்றில் கலக்கும். மற்றொரு மதகு வழியாக வெளியேறும் நீர் வெண்மணி ஏரி, ஜப்ரான்பேட்டை ஏரி ஆகியவற்றுக்குச் செல்லும்.
போளூர் பெரிய ஏரி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது இந்த ஏரி மீண்டும் ஓரிரு நாளில் நிரம்பி வழிய உள்ளது. இதன் காரணமாக போளூர் பெரிய ஏரியை போளூர், பேட்டை, மாம்பட்டு உள்பட போளூரைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com