செங்கத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

செங்கத்தில் சுகாதாரத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கத்தில் சுகாதாரத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தில் ஷாகீர் (9) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, செங்கம் பகுதியில் சுகாதாரத் துறையினர் டெங்கு காய்ச்சல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறையினர் செங்கம் நகரில் திங்கள்கிழமை டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில், செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சத்யம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
செங்கம் - போளூர் சாலையில் தொடங்கிய ஊர்வலம், பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்றது.
பின்னர், அங்கு டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர், டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
இதில், ஆணையாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், சேகர், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரமேஷ் உள்பட சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com