மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது: பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அறிவுரை வழங்கி உள்ளார்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், வாந்தி, பேதி, வயிற்று வலி மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல் மருந்துக் கடைகள், பெட்டிக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.
மாறாக, அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விற்கும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு. வடநேரே எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com