ஆதனூர் பள்ளியை தொண்டு நிறுவனம் தத்தெடுப்பு

ஆரணியை அடுத்த ஆதனூர் அரசு தொடக்கப் பள்ளியை சூயப்-ரூத் தொண்டு  நிறுவனத்தினர் தத்தெடுத்து மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,  சிறப்பு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.

ஆரணியை அடுத்த ஆதனூர் அரசு தொடக்கப் பள்ளியை சூயப்-ரூத் தொண்டு  நிறுவனத்தினர் தத்தெடுத்து மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,  சிறப்பு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.
இதற்கான நிகழ்ச்சிக்கு  ஆரணி டிஎஸ்பி ஜெரினாபேகம் தலைமை வகித்தார்.
ஆரணி கிராமிய  காவல் நிலைய ஆய்வாளர் சாலமன்ராஜா, சூயப் நிறுவனர் பிரிசில்லா நிர்மலகுமாரி,  சூயப் தலைவர் ராஜன்ஐசக், சூயப் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி,  சூயப் நிறுவன பணியாளர்கள், ஆதனூர் கிராம பள்ளி, சிறப்பு மைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆதனூர் சுயஉதவிக் குழு  உறுப்பினர்கள்,  மாணவ,  மாணவிகள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த சிறப்பு வகுப்பில் குறை ஆராய்ச்சி-குறை தீர்த்தல் முறை மூலம் பயிற்சி  அளிக்கப்படும் என்றும்,  இணை பாடத் திட்ட  திறன்கள்,  நற்குணங்கள்,  நல்லொழுக்கம் ஆகியவையும் கற்றுத் தரப்படும். மேற்படிப்பிற்கு  ஊக்குதலாக அமையும் என்று சூயப் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com