ஜிஎஸ்டி வரி குறித்த விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சரக்கு, சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) தொடர்பான மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சரக்கு, சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) தொடர்பான மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். வணிக வரித் துறையின் வேலூர் கோட்ட இணை ஆணையர் கு.லதா முன்னிலை வகித்தார்.
வணிக வரித் துறை திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் சோ.சுமித்ரா வரவேற்றார். கூட்டத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
 பதிவுச் சான்று மற்றும் நமூனா தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கப்பட்டது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த வணிகர்கள், வணிகவரித் துறை அலுவலர்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், பட்டயக் கணக்கர்கள் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com