தடகளம்: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி வெற்றி

திருவண்ணாமலை வட்ட அளவிலான தடகளம் உள்பட பல்வேறு  போட்டிகளில்  ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 147 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

திருவண்ணாமலை வட்ட அளவிலான தடகளம் உள்பட பல்வேறு  போட்டிகளில்  ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 147 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.  இதில், திருவண்ணாமலை வட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சார்பில் பங்கேற்ற  டி.பிரியா, கே.ஜெயஸ்ரீ, ஜி.ஜெயஸ்ரீ, எம்.குமாரி, எஸ்.மாலதி ஆகியோர் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிகளில் ஆர்.ஹேமலதா, கே.ரஜினி, பி.கிருத்திகா, இ.ரம்யா, எம்.என்.ஹரினி, வி.ரேச்சல் ரோஸ்லின் ஆகியோரும், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிகளில் எஸ்.சந்தியா, டி.விமலாமேரி, எல்.ராஜலட்சுமி, சி.சுகந்தி, எஸ்.அமுலு, எஸ்.விக்னேஷ்வரி, எஸ்.சிவரஞ்சனி ஆகியோரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
14 வயதுக்கு உள்பட்டோருக்கான தொடர் ஓட்டத்தில் எஸ்.வசந்தபிரியா, எம்.குமாரி,  எஸ்.மாலதி, ஜி.ஜெயஸ்ரீ ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.  17 வயதுக்கு உள்பட்டோருக்கான தொடர் ஓட்டத்தில் இ.ரம்யா, கே.ரஞ்சினி, ஆர்.ஹேமலதா, பி.கிருத்திகா ஆகியோரும், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான தொடர் ஓட்டத்தில் எஸ்.அமுலு, டி.விமல்மேரி, எஸ்.சந்தியா, சி.சுகந்தி ஆகியோரும் முதலிடம் பெற்றனர்.
 மேலும், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மாணவி பி.கிருத்திகா 20 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் எஸ்.அமுலு 18 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றார்.   ஆக மொத்தம் இந்தப் பள்ளி மாணவ,  மாணவிகள் 147 புள்ளிகள் எடுத்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
பாராட்டு விழா: போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர்
வி.பவன்குமார் தலைமை வகித்தார். செயலாளர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார், ஆங்கில வழிச் செயலாளர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ் வழிச் செயலாளர் வி.சுரேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமார், டி.வி.சுதர்சன், டி.வி.நரேந்திரகுமார், முதுகலை ஆசிரியர் எம்.ராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் என்.ஆர்.மணி, உடல்கல்வி ஆசிரியர்
எம்.ரமேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com