பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

சிறந்த செயல் திட்டங்களை உருவாக்கிய திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் சுரேஷ் பாராட்டினார்.

சிறந்த செயல் திட்டங்களை உருவாக்கிய திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் சுரேஷ் பாராட்டினார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் உருவாக்கிய செயல் திட்டங்களை பேராசிரியர் சுரேஷ் திங்கள்கிழமை சீராய்வு செய்தார். இதையடுத்து, சிறந்த செயல் திட்டங்களை உருவாக்கிய மாணவர்களை பாராட்டி சுரேஷ் பேசியதாவது: இந்தக் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அகில இந்திய அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்பாக உள்ளது. மாணவர்கள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத, சூரிய ஒளி மின் ஆற்றலை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும். மாணவர்கள் உருவாக்கியுள்ள புதிய செயல்திட்டம் மூலம் மிகக் குறைந்த செலவில், அதிக மின் உற்பத்தி செய்ய முடியும் என்றார் அவர்.
இதையடுத்து, சிறந்த செயல் திட்டங்களை உருவாக்கிய இயந்திரவியல் துறை மாணவர்களை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, சென்னை அண்ணா பல்கலை. பேராசிரியர் முகேந்திரன், கல்லூரி முதல்வர் தண்டபாணி, ஆராய்ச்சி - மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், துறைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com