பாஜக தலைவர் அமித் ஷா இன்று திருவண்ணாமலை வருகை

பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை வருகிறார்.

பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை வருகிறார்.
இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் மைதானத்தில், ஹெலிகாப்டர் மூலம் அமித் ஷா செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவண்ணாமலை -  செங்கம் சாலையில் உள்ள ரமணாஸ்ரமத்துக்கு சென்று அவர் வழிபடுகிறார்.
பின்னர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அமித்ஷாவை வரவேற்க மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தலைவர்கள் இல.கணேசன், வானதி சீனிவாசன் உள்பட ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: இதையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், ஸ்ரீரமணாஸ்ரமம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை -  செங்கம் சாலை உள்பட நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, அமித்ஷாவை வரவேற்க திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com