இன்று பேரிடர் குறைப்பு தினம்: பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பேரிடர் குறைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்புத் துறையுடன் இணைந்து மாதிரி பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டம் வாரியாக பள்ளி, கல்லூரிகளுடன் தீயணைப்புத் துறை இணைந்து பேரிடர் மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகளில் பேரிடர் மீட்புப் பணிகள் குறித்த மாதிரி செயல் விளக்கமும் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவசர கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, அவசர உதவிக்கு 100, 101, 108 உள்ளிட்ட எண்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com