வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை ஏ.கலைவாணி வரவேற்றார். செய்யாறு கோட்டாட்சியர் கிருபானந்தம், வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.முரளிதரன் ஆகியோர் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர். முகாமில் மாணவிகளுக்கு வாக்காளர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன. தேர்தல் துணை வட்டாட்சியர் சுமதி மற்றும் கல்லூரிப் பேராசிரியைகள் பங்கேற்றனர். முகாமையொட்டி, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
டெங்கு விழிப்புணர்வு முகாம்: இந்த நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரிச் செயலர் எம்.ரமணன் தலைமை வகித்தார். டெங்கு நோய் விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி, வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜோதி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை எஸ்.பி.நிர்மலாதேவி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com