இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை, திருவிழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி மனிதனுக்கு தாற்காலிக செவிட்டுத் தன்மையையும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தொடர் ஓசை நிரந்தர செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிக ஒலி, ஒளியுடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிப்பதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதேபோல, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பதிலும் கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலியின் அளவானது 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் அளவுக்கு அதிகமாக இருக்கும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக்கூடாது. பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. 125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.
ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்து, வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com