செய்யாறு, காஞ்சிபுரத்தில் இருந்து ஒச்சேரிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம்: எம்எல்ஏ நடவடிக்கை

பிரம்மதேசம் புதூர் பாலாற்று மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் மாவட்டம், ஒச்சேரிக்கு அரசுப் பேருந்துகளை இயக்கிட செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன்

பிரம்மதேசம் புதூர் பாலாற்று மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் மாவட்டம், ஒச்சேரிக்கு அரசுப் பேருந்துகளை இயக்கிட செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் நடவடிக்கை மேற்கொண்டார்.
வெம்பாக்கத்தை அடுத்த பிரம்மதேசம் புதூர் பகுதியில் பாலாறு செல்கிறது. பாலாற்றைக் கடந்து ஒச்சேரிக்கு சென்று வர செய்யாறு, வெம்பாக்கம், பிரம்மதேசம் புதூர் உள்ளிட்ட பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளம் வந்தால், இந்தப் பகுதி மக்கள் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா வழியாக பல கி.மீ. சுற்றிக்கொண்டு ஒச்சேரிக்கு சென்று வந்தனர். இவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு வசதியாகவும் பாலாற்றுப் பகுதியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு தயாரான நிலையில், மேம்பாலத்தின் மற்றொரு பகுதி அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாமண்டூரில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மண் சாலையாக இருந்ததால் பேருந்துகள் இயக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இதுகுறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியாக வேலூர் மாவட்ட நிர்வாகம் மண் சாலையில் தார்ச்சாலை அமைத்தது.
பேருந்துகளை இயக்க நடவடிக்கை: இதையடுத்து, செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் வட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரம்மதேசம் புதூர் பாலாற்று மேம்பாலத்தின் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்கிட தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் விரைவான நடவடிக்கை மேற்கொண்டார்.
அதனடிப்படையில், செய்யாறு, காஞ்சிபுரத்தில் இருந்து பிரம்மதேசம்புதூர் பாலாற்று மேம்பாலத்தின் வழியாக ஒச்சேரிக்கு கடந்த 5 நாள்களாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. செய்யாறில் இருந்து ஒச்சேரிக்கு தடம் எண்.10 பேருந்து, காலை 7.55, இரவு 7.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. பேருந்து கட்டணம் ரூ.16 ஆகும்.
இதே போன்று காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம், பிரம்மதேசம் வழியாகவும் ஒச்சேரிக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் மகிழ்ச்சி: பிரம்மதேசம் புதூர் பாலாற்று மேம்பாலம் வழியாக செய்யாறு, காஞ்சிபுரத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பிரம்மதேசம், நாட்டேரி, தென்னம்பட்டு, வெம்பாக்கம், வெங்களத்தூர், வடஇலுப்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com