ஜவ்வாதுமலையில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

போளூரை அடுத்த ஜவ்வாதுமலையில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அண்மையில் ஆய்வு செய்தார்.

போளூரை அடுத்த ஜவ்வாதுமலையில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அண்மையில் ஆய்வு செய்தார்.
ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூர், குட்டகரை, அத்திப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் விவசாயக் கிணறுக்கு அருகில் குழிகிணறு அமைக்கும் பணி, பசுமை வீடு கட்டும் பணி, ஊராட்சி சார்பில் மரக்கன்று நடும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. மேலும், ஏரிநெல்லிமரத்தூர் கிராமத்தில் ரூ.78 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட திட்ட இயக்குநர் லோகநாயகி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com