தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 8 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதுவற்கு 2,964 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில், 2,564 பேர் தேர்வு எழுதினர். 400 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் அனுமதிக்கப்படவில்லை. அறைக் கண்காணிப்புப் பணி மற்றும் பறக்கும் படையில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com