ஸ்ரீசௌடேஸ்வரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெளடேஸ்வரியம்மன் கோயிலில்14-ஆவது ஆண்டு நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெளடேஸ்வரியம்மன் கோயிலில்
14-ஆவது ஆண்டு நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் வியாழக்கிழமை நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் நடைபெற்ற அம்மன் வீதியுலாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
3-ஆவது நாளான சனிக்கிழமை இரவு ஸ்ரீகாமாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர் நிகழ்ச்சிகள்: விழாவின் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமீனாட்சியம்மன் அலங்காரத்திலும், வரும் 25-ஆம் தேதி ஸ்ரீகெஜலட்சுமி அலங்காரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீதுர்க்கையம்மன் அலங்காரத்திலும், 27-ஆம் தேதி ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்திலும், 28-ஆம் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார்.
விஜய தசமி நாளான வரும் 29-ஆம் தேதி காலை ஸ்ரீசெளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் இரவு ஸ்ரீசரஸ்வதியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சூரசம்ஹார விழா: வரும் 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி சூரசம்ஹார விழா, அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீசெளடேஸ்வரியம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com