அரசுப் பள்ளியில்  கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது  .

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது  .
தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் அண்மையில் ஆய்வுக்காக வந்தபோது, பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் பாடம் படிப்பதாகவும், எனவே, கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், இந்தப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 50 லட்சத்தில் 8 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அனுமதி வழங்கினார். இதையடுத்து, தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில், தலைமைச் செயற்பொறியாளர் அமுதா, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெயசங்கரமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாஅம்மாள், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் மண்ணம்மாள், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சித்ரா, பள்ளித் தலைமை ஆசிரியர்  சரவணன், ஒப்பந்ததாரர் சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை, செயலர் ஜெயராமன், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com