இன்று தூய உலக மாதா பேராலய 45-ஆவது ஆண்டுப் பெருவிழா

திருவண்ணாமலை தூய உலக மாதா பேராலயத்தின் 45-ஆவது ஆண்டுப் பெருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 18, 19) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை தூய உலக மாதா பேராலயத்தின் 45-ஆவது ஆண்டுப் பெருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 18, 19) நடைபெறுகிறது.
 திருவண்ணாமலை தூய உலக மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான 45-ஆவது ஆண்டுப் பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 தொடர்ந்து, சனிக்கிழமை வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு ஐ.ஜான் ராபர்ட் தலைமையில் நற்கருணைப் பெருவிழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் ஆடம்பர சிறப்பு கூட்டுத் திருப்பலி, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல், திருவருட்சாதனம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 நிகழ்ச்சியில், இறையரசு சபையின் நிறுவனரும், பேராயருமான ஏ.எம்.சின்னப்பா கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நகர வீதிகளில் அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com