செங்கத்தில் பாரதி உலா நிகழ்ச்சி

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதி உலா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதி உலா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் உதயராம், எக்ஸ்னோரா இந்திரராஜன், செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் தனஞ்செயன், கல்லூரி முதல்வர் பரிமளாஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். பேராசிரியர் சங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில் பாரதியார் பாடல்கள், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்கள் பேசினர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் டெல்லிகணேஷ் கலந்து கொண்டு, பாரதியாரின் பெருமைகள் குறித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, பாரதியார் குறித்து சிறப்பாகப் பேசிய மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அதிகாரி மதியழகன், உரத்த சிந்தனை வாசகர் வட்டத் தலைவர் சண்முகம், ஓய்வு பெற்ற கல்வியாளர் மாணிக்கம், முன்னாள் செங்கம் பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, எச்.பி. கேஸ் அசோகன் உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com