உலக மண் தினம் கடைப்பிடிப்பு

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், உலக மண் தின நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், உலக மண் தின நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையத் தலைவர் ந.ரமேúஷ்ராஜா தலைமை வகித்தார். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண்மை) வே.சுரேஷ் வரவேற்றார்.
மண் வளம் காத்தலின் அவசியம், வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வந்தவாசி வட்டார வேளாண் உதவி 
அலுவலர் பி.பெருமாள், தோட்டக்கலை துறை சார்ந்த மானியத் திட்டங்கள் குறித்து வந்தவாசி வட்டார தோட்டக்கலை அலுவலர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இயற்கை விவசாயம் குறித்து வழூர் முன்னோடி விவசாயி வி.வாசுதேவன், மண் பரிசோதனையின் அவசியம் குறித்து அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்(உழவியல்) பி.ராஜேஷ், மண் சேகரிப்பு முறை குறித்து அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) ப.நாராயணன் ஆகியோர் விளக்கிக் கூறினர். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) மார்க்ரெட் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com