சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஸ்ரீசதுர்வேத சோமநாத ஈஸ்வரர் கோயிலில் 10-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 10-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் முதல்கால, இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
 மாலை 7 மணிக்கு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீஅமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுர்வேத சோமநாத ஈஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றன.
 இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 இன்று தெப்பல் உற்சவம்: புதன்கிழமை (பிப்ரவரி 14) இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவம், கிராமிய நாட்டுப்புற இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள் பிச்சாண்டி, பாண்டுரங்கன், கோவரத்தினம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல, செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com