சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி மைய ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். 
சுவாமி விவேகானந்தர் குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை ஆர்.நர்மதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார். மேலும், விவேகானந்தர் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
சுவாமி விவேகானந்தர் தொண்டு நிறுவனத் தலைவர் ம.சுரேஷ்பாபு, குருஜி சேவா சங்க நிர்வாகி கோ.சுவாமிநாதன், கல்வி மைய ஆசிரியர்கள் செல்வராஜ், பூபாலன் மற்றும் எஸ். சுரேஷ், முருகன், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com