மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின்
மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசி, ஆரணி பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஊர்வலம் நடைபெற்றது.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எ.கிருஷ்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதி, தேரடி, காந்திசாலை வழியாக சென்றது. ஊர்வலத்தில், மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

இதில், திட்ட மேற்பார்வையாளர் மீனா, ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் மைய சிறப்பாசிரியர் லத்தீப், பள்ளி ஆசிரியர்கள் முத்தமிழன், சாதிக் மற்றும் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மைய மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆரணியில்...: ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 27-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், சந்தை சாலை வழியாகச் சென்றது. ஊர்வலத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேகர் தொடக்கிவைத்தார். 

இதில், ஆசிரியர்கள் அல்போன்சா, குமாரி, புருஷோத்தமன், யோகவள்ளி, பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com