கொடியேற்று விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 71-ஆவது நிறுவன நாளையொட்டி, வந்தவாசி பகுதியில் அந்தக் கட்சியின் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 71-ஆவது நிறுவன நாளையொட்டி, வந்தவாசி பகுதியில் அந்தக் கட்சியின் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மற்றும் வந்தவாசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வந்தவாசி பெரிய பள்ளிவாசல் அருகில், காயிதேமில்லத் பள்ளிவாசல் எதிரில் கம்மாள தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் தாழம்பள்ளம், புதூர் ஆகிய கிராமங்களிலும் கொடியேற்று விழா நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அப்துல்காதர்ஷரீப், மாவட்ட துணைத் தலைவர் எ.அப்துல்வஹாப், நகரத் தலைவர் பி.ஹாஜாமொய்தீன், நகரப் பொருளாளர் டி.கே.ஏ.அப்துல்காதர் மற்றும் எ.காதர்பாஷா ஆகியோர் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
மாவட்ட கௌரவத் தலைவர் டி.எம்.பீர்முஹம்மது, மாவட்டச் செயலர் எம்.அப்துல்அமீது, மாவட்டப் பொருளாளர் கே.எம்.கே.கமாலுதீன், மாவட்ட துணைத் தலைவர் எம்.காதர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com