துரித உணவுக் கடையில்   1,296 போலி மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஆரணியை அடுத்த ஆதனூர் கூட்டுச் சாலையில் துரித உணவுக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1,296 போலி மதுப் புட்டிகளை

ஆரணியை அடுத்த ஆதனூர் கூட்டுச் சாலையில் துரித உணவுக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1,296 போலி மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
ஆரணியை அடுத்த ஆதனூர் கூட்டுச் சாலையில் இரும்பேடு, அரிகரன் நகரைச் சேர்ந்த சையத்பாஷா (23) துரித உணவுக் கடை நடத்தி வருகிறார். இவர், தனது கடையில் போலி மதுப் புட்டிகளை விற்பனை செய்வதாக ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் இ.செந்தில் உத்தரவின்பேரில், ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் சாலமன்ராஜா, உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் சையத்பாஷா கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு விற்பனைக்காக 27 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,296 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சையத்பாஷாவையும் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், போலி மதுப் புட்டிகளை அவருக்கு விநியோகம் செய்த செஞ்சியைச் சேர்ந்த குமாரை போலீஸார் தேடி 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com