பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

செய்யாறு, சேத்துப்பட்டு பகுதிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு, சேத்துப்பட்டு பகுதிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை உதவித் திட்ட அலுவலர் பெ.சுப்பிரமணியன் பார்வையிட்டு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள், பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்தார். 
மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகள் குறித்தும், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய உட்கூறுகள், பள்ளி வளர்ச்சித் திட்டம், நல வாழ்வு, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தரமான கல்வி, தமிழக அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி, செய்யாறு ஒன்றியத்திலுள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் 96 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 
இதே போன்ற பயிற்சி கொருக்கை, கொருக்காத்தூர், பல்லி, முனுகப்பட்டு ஆகிய மையங்களிலும் நடைபெற்றது.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், குறுவள மைய அளவிளான  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முகாமுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கனிமொழி தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். இதில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 81 மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பயிற்றுனர்கள் கார்த்திகேயன், ஜெயப்பிரகாஷ், அருள்ஜெயந்தி, உஷா, கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
முகாமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் லோகநாயகி, ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com