காமக்கூரில் அதிமுக பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆலோசனை

ஆரணியை அடுத்த காமக்கூரில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டம் குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த காமக்கூரில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டம் குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காமக்கூர் பகுதியில் அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. 
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மக்களவை உறுப்பினர்கள் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, ஆர்.வனரோஜா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சோழவேந்தன், விழுப்புரம் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், ஆரணி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, பொதுக்கூட்டத்தில் ஏராளமான பெண்களை பங்கேற்கச் செய்ய வைப்பது, கட்சியினர் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில், மேற்கு ஒன்றியச் செயலர் அரையாளம் எம்.வேலு, 
ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.சம்பத், புங்கம்பாடி சுரேஷ், மாணவரணி குமரன், நிர்வாகிகள் சுப்பிரமணி, தசரதன், குமார், துரை, முரகன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com