அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை திமுக, அதிமுக உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.


தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை திமுக, அதிமுக உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை நகர திமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா ஊர்வலம் காமராஜர் சிலை எதிரில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தார். திமுக தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், கோ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமஞ்சன கோபுர வீதி, திருவூடல் தெரு, பெரிய கடைத் தெரு, தேரடி வீதி, கொசமடத் தெரு வழியாக வந்த ஊர்வலம் அண்ணா சிலை எதிரே நிறைவடைந்தது.
தொடர்ந்து, அண்ணா சிலைக்கு எ.வ.வேலு எம்எல்ஏ தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட அமைப்பாளர்கள் எ.வ.வே.கம்பன், டி.வி.எம்.நேரு, மாவட்டப் பிரதிநிதி குட்டி க.புகழேந்தி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தமிழ்ச் சங்கம்:
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், பொருளாளர் மா.சின்ராஜ் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ந.சண்முகம் வரவேற்றார். தொடர்ந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் திருக்குறள் சா.சுப்பிரமணியன், ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராஜன், பேராசிரியர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி
அதிமுக: ஆரணியில் நகர அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன் தலைமையில், அதிமுகவினர் ஊர்வலமாக அண்ணா சிலை வரை சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
மேலும், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர். இதில், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரிபாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் அசோக்குமார், பி.ஆர்.ஜி.சேகர், வேலு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக: திமுக சார்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமையில், திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இதில், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, நகர, ஒன்றியச் செயலர்கள் ஏ.சி.மணி, அன்பழகன், தட்சிணாமூர்த்தி, வெள்ளைகணேசன், சுந்தர், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் விண்ணமங்கலம் ரவி, முன்னாள் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ஜி.வெங்கடேசன், வழக்குரைஞர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமமுக: அமமுக சார்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் சி.ஏழுமலை தலைமையில், ஆரணி பழைய பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், நிர்வாகிகள் பையூர் ஏ.சந்தானம், வேலாயுதம், ரமேஷ், புருஷோத், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக: தேமுதிக சார்பில், மாவட்டச் செயலர் கோபிநாத் தலைமையிலான நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், நகரச் செயலர் சுந்தர்ராஜன், ஒன்றியச் செயலர் சரவணன், மாவட்டப் பொருளாளர் ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக: மதிமுக சார்பில், மாவட்டச் செயலர் டி.ராஜா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், நகரச் செயலர் எஸ்.கே.ரத்தினகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் ஊராட்சியில் வேலூர் - திருவண்ணாமலை சாலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.
விழாவில், அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் கருணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் அமமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வந்தவாசி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அந்தக் கட்சி அலுவலகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி எ.விஜய் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் துரை.வீராசாமி, எ.கன்னியப்பன், தட்சணாமூர்த்தி மற்றும் கே.வெங்கடேசன், கொடநல்லூர் குமார், எ.ஜாப்பர், கே.விஜயன், பொன்னூர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கம்
அதிமுக: செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றியச் செயலர் ஆர்.மதியழகன் தலைமையில் போளூர் சாலையில் இருந்து துக்காப்பேட்டை அண்ணா சிலை வரை ஊர்வலமாகச் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணித்து இனிப்பு வழங்கினர்.
இதில், தலைமைக் கழகப் பேச்சாளர் வெங்கட்ராமன், மகரிஷி மனோகரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குமார், சங்கர், ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் முரளிதரன், வழக்குரைஞர்கள் செல்வம், தினகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பத்மா, இளைஞரணி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக: செங்கம் ஒன்றிய, நகர திமுக சார்பில், அண்ணா சிலைக்கு செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், ஒன்றியச் செயலர் பிரபாகரன், நகரச் செயலர் சாதிக்பாஷா, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் காசி, மேல்ராவந்தவாடி கூட்டுறவு சங்கத் தலைவர் செந்தில்குமார் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com