ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ரசாயனக் கலவை பூச நடவடிக்கை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பாசிபடர்வதைத் தடுக்க ரசாயனக் கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் இணை கண்காணிப்பாளர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பாசிபடர்வதைத் தடுக்க ரசாயனக் கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் இணை கண்காணிப்பாளர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சனிக்கிழமை பார்வையிட்ட அவர் கூறியதாவது:
கோட்டை வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரங்கள், கற்சிலைகள் உள்ளிட்டவை மழையால் பாசி படர்வதைத் தவிர்க்க ரசாயனக் கலவை பூச அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறப்பட்டு இப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com