நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வீணாகும் உளுத்தம் பருப்பு: பொதுமக்கள் வேதனை

திருப்பத்தூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 25 டன் உளுத்தம் பருப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 25 டன் உளுத்தம் பருப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 33,222 ரேஷன் கடைகள் உள்ளன. பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இங்கு விற்கும் உணவுப் பொருள்களையே வாங்கி உண்ணும் சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் ஏழு மாதங்களாக உளுத்தம் பருப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 25 டன் உளுத்தம் பருப்பு விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, அரசு அறிவித்தால் மட்டுமே உளுத்தம் பருப்பை விநியோகிக்க முடியும் என்றார்.
இவ்வாறு விநியோகம் செய்யாமல் இருந்தால் உளுத்தம் பருப்பு வீணாகி யாருக்கும் பயன்படாமல் போகும் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், கடந்த ஆறு மாதங்களாக துவரம் பருப்பும் சீராக விநியோகிகப்படுவதில்லை எனவும், கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பொருள்கள் எடை குறைவாக இருப்பதாக அதிகாரிகளிடம் கடை ஊழியர்கள் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, திருப்பத்தூரில் உள்ள கிடங்கில் இருப்பில் உள்ள 25 டன் உளுத்தம் பருப்பை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யவும், உரிய எடையுடன் பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com