தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவப் பணிகள் இயக்குநர் தகவல்

தவறு செய்த மருத்துவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநர் மருத்துவர் பானு தெரிவித்தார்.
தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவப் பணிகள் இயக்குநர் தகவல்


தவறு செய்த மருத்துவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநர் மருத்துவர் பானு தெரிவித்தார்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவது அதிகரிக்கும். டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கு பகுதியில் தான் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கேரளத்தில் இருந்து காய்ச்சல் பரவுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் எவரும் இறக்கவில்லை என்ற நிலையில் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
மருத்துவர்கள் பற்றாக்குறை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,500 மருத்துவர்கள் நியமனம் செய்வதற்கு தடையாணை உள்ளது. அது விலக்கப்பட்டால் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். அப்போது பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும். மருத்துவர்கள் அவரவர்களுடைய மாவட்டத்திலேயே விரும்பும் இடங்களில் தான் நியமிக்கப்படுகின்றனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் சிறுமி இறந்தது தவறான தகவலாகும்.
ஏற்கெனவே அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விபத்தில் சிக்கிய ராஜ்குமார் இறந்தார். மருத்துவர்கள் 1 மணி நேரம் உணவு இடைவேளைக்காக மட்டுமே சென்றுள்ளனர். முக்கிய சேவை துறை இது. அதனால் மருத்துவர்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்வது கண்டறியப்பட்டால் உறுதியாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பேட்டியின் போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, மருத்துவ அலுவலர் கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.
மருத்துவர் பானு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பணியாளர்களை தனியாக சந்தித்து அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com