சாலையைச் சீரமைக்கக் கோரி சார்-ஆட்சியரை முற்றுகையிட்ட வணிகர்கள்

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த சார்-ஆட்சியரை வணிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த சார்-ஆட்சியரை வணிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக நகராட்சி சார்பில் 36 வார்டுகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. குழாய் பதிக்கப்பட்ட சில இடங்களில் கூட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. 
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில்  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஆலங்காயம் ரோடு, பெரிய கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சார்-ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், திட்ட மேலாளர் செல்வமாரியப்பன், நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.
அப்போது, சார்-ஆட்சியரை முற்றுகையிட்ட அப்பகுதி வணிகர்கள் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்து மூடப்படாமல் உள்ளதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம் எனக் கூறினர். இதையடுத்து  சார்-ஆட்சியர், பொக்லைன் மூலம் உடனடியாக சாலையைச் சீரமைக்க வேண்டும் என திட்ட மேலாளருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com