கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு ரூ. 32 லட்சம் பயிர் கடன்

நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை ரூ. 32 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை ரூ. 32 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்பட்டது.
இச்சங்கத்தில் நாட்டறம்பள்ளி, கத்தாரி, நாயனசெருவு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்  உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் சங்கத்தின் தலைவருடைய எதிர்ப்பு காரணமாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உடனடியாக விவசாயிகளுக்கு வட்டியில்லா  பயிர்க் கடனை வழங்க சங்கச் செயலாளர் நகராஜுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பயிர் கடன் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில்  நாயனசெருவு, கத்தாரி, நாட்டறம்பள்ளி, தோப்பலகுண்டா, சொரக்காயல்நத்தம், ஆத்தூர்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 50 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 32 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிர்க் கடன்களை சங்கச் செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com