ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாலாஜாபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாலாஜாபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.
ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, நலிவுற்றோர் குடும்பங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு பெற ஏதுவாக மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், நான்காம் கட்டமாக வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம், ஆற்காடு வட்டங்களில் இருந்து, 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனத்தினர் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர்.
 இதைத்தொடர்ந்து, தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் சிவராமன் வரவேற்றார். இதில், 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகளை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கிப் பேசினார்.
இவ்விழாவில், எம்எல்ஏ என்.ஜி. பார்த்தீபன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட புது வாழ்வுத்திட்ட மேலாளர் சம்பத்குமார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com