ஐவிஎல் மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐவிஎல் மெட்ரிக். மேல்நிலை பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐவிஎல் மெட்ரிக். மேல்நிலை பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஆர்.சுப்ரியா 497 மதிப்பெண்களும் மாணவர்கள் எஸ்.சந்தீப், வி.கீர்த்தி ஆகியோர் 495 மதிப்பெண்களும், எம்.காவ்யா, சி.மகேஷ்குமார், எஸ்.கெளரிஸ்ரீ, ஜி.கோவர்த்தன், எம்.தமிழரசன் ஆகியோர் 494 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணிதத்தில் 23 மாணவர்களும், அறிவியலில் 11 மாணவர்களும், சமூக அறிவியலில் 88 மாணவர்களும் 100 மதிப்பெண்கள்
பெற்றுள்ளனர்.
தமிழில் 7 மாணவர்களும், ஆங்கிலத்தில் 5 மாணவர்களும், கணிதத்தில் 40 மாணவர்களும், சமூக அறிவியலில் 47 மாணவர்களும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், 480-க்கு மேல் 79 மாணவர்களும், 470-க்கு மேல் 110 மாணவர்களும், 460-க்கு மேல் 129 மாணவர்களும், 450-க்கு மேல் 151 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளியின் செயலர் டி.கோவிந்தராஜ், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com