வாணி மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

வாணியம்பாடியில் இயங்கி வரும் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சிபெற்றுள்ளது.

வாணியம்பாடியில் இயங்கி வரும் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி
பெற்றுள்ளது.
இப்பள்ளியின் மாணவர் எஸ்.அருண்குமார் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் ஆர்.விக்னேஷ் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றார். மாணவிகள் கே.எஸ்.வசுந்தராசவுந்தர்யா, யு.கிருபாவதி, மாணவர் எஸ்.அருணாசலம் ஆகியோர் தலா 491 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடம் பெற்றனர். இ.நீலவிழி, கே.அனுபிரியா ஆகியோர் தலா 490 மதிப்பெண்கள் பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 475-க்கு மேல் 23 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும் பெற்றனர். ஆங்கிலத்தில் 5 பேர் தலா 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 6 மாணவர்கள் தலா 100 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 8 மாணவர்கள் மற்றும் அறிவியலில் ஒரு மாணவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை வாணி கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.கோபால், செயலாளர் ஆர்.விவேகானந்தன், பொருளாளர் செல்வராஜ், பள்ளி முதல்வர் கந்தசாமி, வாணி கல்வியியல் கல்லூரி முதல்வர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com