எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

வேலூர் அருகே சோழவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

வேலூர் அருகே சோழவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
வேலூர் மட்டுமல்லாது சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 100-க்கும் அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டன. தடுப்பு ஏற்படுத்தியிருந்த மைதானத்தில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் முதுகில் தட்டி இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சீறிப்பாய்ந்து குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போலீஸார் கெடுபிடி: எருது விடும் திருவிழாவை நடத்த அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக முடிக்க விழாக் குழுவினரிடம், போலீஸார் கெடுபிடி செய்ததால் விழா முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அழைத்து வந்திருந்த ஏராளமான காளைகளை அவிழ்த்து விட முடியாமல் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.
விழாவுக்கு ஊர் பிரமுகர்கள் சிவகுமார், மகாலிங்கம், கோவிந்தராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்று, போட்டியில் வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
டிஎஸ்பி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 38 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வட்டாட்சியர் ஸ்ரீராம், வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com