வேளாண் அறிவியல் நிலைய ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 8-ஆவது அறிவியல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 8-ஆவது அறிவியல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தலைமை வகித்தார். வேளாண்மை விரிவாக்க இயக்குநர் எச்.பிலிப், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக மண்டல இயக்குநர் ஒய்.ஜி.பிரசாத், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பி.வாசுதேவரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் சா.நந்தகுமார் வரவேற்றார். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவதற்கு ஏதுவாக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டம் வரையறுக்கப்பட்டது. நிலக்கடலை, நெல், துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டன.
அறிவியல் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பரண்மேல் ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழி இனங்கள், அசோலா விதை, மண்ணில்லா தீவனப்புல் வளர்ப்பு குறித்த செயல் விளக்கக் திடல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சா.ஜோசுவா டேவிட்சன், முன்னோடி விவசாயிகள், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டுவளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, சமூகக் காடுகள் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்,
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com