பேருந்தில் நகை திருடியதாக பிடிபட்ட பெண் தப்பியோட்டம்

பேருந்தில் பயணியிடம் நகை திருடியதாகப் பிடிபட்ட பெண், காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியனார்.

பேருந்தில் பயணியிடம் நகை திருடியதாகப் பிடிபட்ட பெண், காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியனார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி மனைவி இந்துமதி (45). இவர், வேலூரில் உள்ள உறவினரைப் பார்க்க புதன்கிழமை அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். ஆம்பூர் வந்ததும் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், வேலூருக்கு டிக்கெட் எடுத்து இந்துமதி அருகே அமர்ந்திருந்தாராம்.
இந்நிலையில், பள்ளிகொண்டா பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது இந்துமதி அருகே அமர்ந்திருந்த பெண் இறங்கினார். அவர் மீது சந்தேகம் கொண்ட இந்துமதி பையை திறந்து பார்த்த போது அதிலிருந்த 5 பவுன் தங்க நகை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பேருந்து நடத்துநரிடம் இந்துமதி கூறியதைத் தொடர்ந்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னால் வந்த மற்றொரு பேருந்தை நிறுத்தி அதில் பார்த்த போது இந்துமதி அருகே அமர்ந்திருந்த பெண் அதிலிருந்தார். அவரிடம் சோதனையிட்டதில் மாயமான 5 பவுன் தங்க நகை இருந்தது. இதையடுத்து அப்பெண் வேலூர் அழைத்து வந்து வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸார் விசாரணையில் அவர், வாணியம்பாடியை அடுத்த நரியம்பட்டையைச் சேர்ந்த பாரதி என்பதும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு தங்க வைக்கப்பட்ட பாரதி தப்பிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்து மகளிர் காவல் நிலையம் வந்த துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம், பணியில் இருந்த மூன்று பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com