நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளைக் கண்டித்து வேலூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளைக் கண்டித்து வேலூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்டத் தலைவர் வி.தசரதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜெகன்நாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.எல்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில எஸ்.சி.எஸ்.டி. அணித் தலைவர் வெங்கடேசன், சென்னை மாநகரப் பொறுப்பாளர் வி.காளிதாஸ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
இதில், முன்னாள் மேயர் பா.கார்த்தியாயினி, முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் கோ.மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்...
வேலூர் மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் நகர பாஜக சார்பில் திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவர் வி.அன்பழகன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பிரசாரப் பிரிவுத் தலைவர் குமரி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கொ.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்,டு நீட் தேர்வின் நன்மைகள் குறித்தும், அதை திசை திருப்பும் கட்சிகளைக் கண்டித்தும் பேசினர்.
இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com