22-இல் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள்

அரக்கோணம் மதர் தெரேசா டேபிள் டென்னிஸ் அகாதெமி, வேலூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை சார்பில், மாவட்ட அளவிலான

அரக்கோணம் மதர் தெரேசா டேபிள் டென்னிஸ் அகாதெமி, வேலூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை சார்பில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணம் நேருஜி நகரில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்படுகிறது. 
 இதுகுறித்து வேலூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம், செயலர் பி.ஜனார்த்தனம் ஆகியோர் கூறியதாவது: இப்போட்டிகள் மினி கேடட் பிரிவு, கேடட் பிரிவு, சப்-ஜூனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, ஆண், பெண் ஒற்றையர் பிரிவு என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் மதர் தெரேசா டேபிள் டென்னிஸ் அகாதெமியின் செயலரை 98943 40003 என்ற எண்ணில் வரும் 20ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com