சுதந்திர தின விழா கோலாகலம்

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பி.எஸ். கோபி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பி.எஸ். கோபி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மனைவிகள் கனகவள்ளி முனியப்பன், ராஜேஸ்வரி ஜெயராமன் ஆகியோரை சால்வை அணிவித்து கௌரவித்தார். நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எஸ். செல்வபாலாஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகராட்சிப் பொறியாளர் பி. சங்கர், மேலாளர் இரா.சூரியபிரகாஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளித் தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், தலைமை ஆசிரியை என். மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் எம்.ஏ. சம்பத்குமார் தேசியக் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தலைமையாசிரியர் டி. பாலசுப்பிரமணியன், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் வி. சுந்தரராஜ், என்எஸ்எஸ் அலுவலர் ஜெ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே.எம். பூபதி கொடியேற்றி வைத்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவர் பி.என்.எஸ். திருநாவுக்கரசு கொடியேற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளித் தாளாளர் டி. குகன், முதல்வர் ஜே. சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் எஸ். தேவேந்திரகுமார் கொடியை ஏற்றி வைத்தார். உதவித் தலைமையாசிரியர் எஸ். ராஜன், ஆசிரியர் ஜெ. காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில், பள்ளித் தாளாளர் டாக்டர் ஏ.கே. கிருஷ்ணசாமி தலைமையில் நூலகத்துக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த தமிழாசிரியர் கே. நடராஜன் கொடியை ஏற்றினார். பள்ளி முதல்வர் எம்.ஆர். மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், வங்கித் தலைவர் வி. ராமு கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் காந்தி, இயக்குநர் என். பழனி, செயலர் வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியாத்தம் நகர, ஒன்றிய காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஜெ. ஜோதி, காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகரத் தலைவர் கே.ஆர். கண்ணன், ஒன்றியத் தலைவர்கள் எம். வீராங்கன், என்.எஸ். துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியர் ஆர்.பாபு தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆணையர் (பொறுப்பு) சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், மேலாளர் தே.து.கோபிநாத், நகரமைப்பு அலுவலர் தாமோதரன், துப்புரவு அலுவலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய ஆணையர் சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரக்கோணம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில்  டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கிராமிய காவல் நிலையத்தில் ஆய்வாளர் அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கணேஷ்பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அரக்கோணம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் துரைசீனிவாசன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் நரேஷ்குமார், கே.ஆர்.நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நகர ஐக்கிய ஜனதாதளம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் நகரத் தலைவர் ஆர்.லோகநாதன் தலைமை விகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.ஜனதாசேகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பாஜக சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் ஜெகன்மோகன் தலைமை வகித்தார். இதில் பாரதிய கிசான் சங்க கரும்பு விவசாயிகள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.முனுசாமிரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செயலர் ரவிக்குமார், இயக்குநர் கே.சாம்பமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வள்ளுவர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் நா.இளங்கோ தலைமை வகித்தார். 
தேசியக் கொடியை அரக்கோணம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.வி.ரவிச்சந்திரன் ஏற்றி வைத்தார். அரக்கோணம் காவனூர், சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.டி.தயாநிதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆணைப்பாக்கம் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிணவறை தொழிலாளி முருகேசன், அலுவலகத் துப்புரவுப் பணியாளர் கணேசன், மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரை கொடியேற்றும் கம்பத்தின் அருகே அழைத்து கொடியின் கயிற்றை 3 பேரிடம் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து தேசியக் கொடியை ஏற்றினார். 
பின்னர், வேலையின்றி தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பார்வையற்ற பட்டதாரிகளான 5 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார். சாலை விபத்தில் உயிரிழந்த 24 குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 22 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், ஓய்வூதிய உதவி தொகைப் பெற சான்று, வாரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து சிறப்பாகப் பணிபரிந்த போக்குவரத்து போலீஸார், நகராட்சி சுகாதாரத் துறை, அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி, சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் ஜெயகாந்தம் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சாரணர் மற்றும் சாரணியர், ஜே.ஆர்.சி  இயக்க மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செ.ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் கோபு, மேலாளர்  முகமதுஅஜீஸ், நகரமைப்பு அலுவலர் சண்முகம், பாஜக செயற்குழு  உறுப்பினர்  சிவபிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை  தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த  மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இதில், முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள் ஜெயராமன், மணி, லட்சுமிகாந்தன், ஜெயசக்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். வாணியம்பாடி பேருந்து நிலையம் எதிரே இந்திரா காந்தி சிலை அருகே நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரியாஸ்அகமது தேசியக் கொடி ஏற்றி வைத்தார். ஆலங்காயத்தில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியேற்றினார்.
வாணியம்பாடி நகர காங்கிரஸ் இளைஞரணி சார்பில் காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சமூக மத நல்லிணக்க விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.  
வாணியம்பாடி வாட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வாணியம்பாடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. முரளி, நகரக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராமசந்திரன், கிராமிய காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றிவைத்தனர். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் வசந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
ஆம்பூரில்...
ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம். மதியழகன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர். வெங்கடேசன் தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் குமரகுருபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொழிலதிபர் நாகலிங்கம் தேசியக் கொடியேற்றினார். வட்டாரக் கல்வி அலுவலர் மாதேஷ், பள்ளி மேலாண்மைத் தலைவர் வெண்ணிலா, கனகம்மாள் அறக்கட்டளை ரமேஷ், தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆம்பூர் மதரஸ-யே-தீனியாத் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் முஹம்மத் தாஜீத்தீன் தேசியக் கொடியேற்றினார்.  வி.அன்வர் பாஷா, தலைமை ஆசிரியர் ஜே. நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் பாங்கி ஹயாத் பாஷா சாஹிப் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் திருப்பதி கலந்து கொண்டார். நிசார் அஹமத் தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பசுலுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர். ஷேக் அப்துல் நாசர் தலைமை வகித்தார். ஆனைக்கார் குழுமப் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் எ. லாயக் அலிகான் தேசியக் கொடியேற்றினார்.  
அக்பர் நசீம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் திருப்பதி தேசிய கொடியேற்றினார்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மஜ்ஹருல் உலூம் கல்லூரி பேராசிரியர்கள் ஷபி அஹமத் கான், ஏ. மீரா மொய்தீன், தலைமை ஆசிரியர் வி. முனீர்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் தேசியக் கொடியேற்றினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, பி.கே. மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வேலு தலைமையில் தலைமை ஆசிரியர் எஸ். தட்சிணாமூர்த்தி தேசியக் கொடியேற்றினார்.சூப்பர் நேஷன் பார்ட்டி சார்பில் கட்சி அலுவலகத்தில் தன்வீர் தேசியக் கொடியேற்றினார். கட்சியின் பொருளாளர் சையத் ஷாகீர், ஒன்றியச் செயலாளர் டேனியல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் கே.ஆர். துளசிராமன் தேசியக் கொடியேற்றினார்.  ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூர் புதுமனை பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி சரவணன் தேசியக் கொடியேற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com