பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்

சிப்காட் பகுதி 3-இல் உள்ள நீர்நிலையில் இருந்து தனியார் தொழிற்சாலைக்கு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை, கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் பகுதி 3-இல் உள்ள நீர்நிலையில் இருந்து தனியார் தொழிற்சாலைக்கு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை, கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் சிப்காட் பகுதி 3 மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இங்கு வாகன உதிரி பாகங்கள், காற்றாலை மின் விசிறி பாகங்கள், ராசாயனம் தயாரிப்பு, இரும்பு உருக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வளாகத்தில் புதிதாக தனியார் சொகு கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மண் தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காட்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உதவியுடன் அங்குள்ள நீர்நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதையறிந்த ரங்கநாதபுரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் அங்கு சென்று மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் வசந்குமார், சிப்காட் போலீஸார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் ஓட்டுநர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் பொக்லைன் இயந்திரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com