டிஎன்பிஎஸ்சி தேர்வு: 1,391 பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வை வேலூர் மாவட்டத்தில் 1,391 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 993 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வை வேலூர் மாவட்டத்தில் 1,391 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 993 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் நிரப்பட உள்ள தொழிலகப் பாதுகாப்பு உதவி இயக்குநர், இளநிலை மின் ஆய்வாளர், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர், மீன்வளத் துறை உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 147 பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்வையொட்டி, வேலூரில் வெங்கடேஸ்வரா மேல்
நிலைப் பள்ளி, டி.கே.எம். கல்லூரி, தோட்டப்பாளையம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளி, கே.ஏ.கே.எம். மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, வி.கே.வி.எம். அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு மேல்
நிலைப் பள்ளி என மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 2,384 பேரில் 1,391 பேர் தேர்வை எழுதினர். 993 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. இத்தேர்வில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரீசியன், டெக்ஸ்டைல்ஸ், சிவில், ஆட்டோ மொபைல் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் பங்கேற்றனர். தேர்வு காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை விருப்பப்பாட பிரிவுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுப் பாடப் பிரிவுகளுக்கும் என இரு கட்டங்களாக நடத்தப்பட்டன.
இந்நிலையில், தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தார். அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையப் பிரிவு அலுவலர் ஜாசின்தாஸ், வேலூர் வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com