கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 6 கோடி கல்விக் கடனுதவி: ஆட்சியர் தகவல்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ரூ. 6 கோடி கல்விக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ரூ. 6 கோடி கல்விக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கில் டாம்கோ, டாப்செட்கோ, கூட்டுறவு வங்கி மற்றும் முன்னோடி வங்கிகள் இணைந்து தொழில் மற்றும் கல்விக் கடன் முகாமை சனிக்கிழமை நடத்தின.
முகாமைத் தொடக்கி வைத்து, 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.21 கோடி கல்விக் கடனுதவிகளை வழங்கி ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் பேசியதாவது:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சார்ந்தவர்கள் பொருளதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருப்பதற்காக அந்த சமுதாயங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு குறைந்த வட்டியில் 3 முதல் 8 சதவீதம் வரையிலான வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2017-18-ஆம் ஆண்டை பொறுத்தவரையில் டாம்கோ, டாம்செட்கோ கழகங்களின் கீழ் தலா ரூ. 3 கோடிக்கு இலக்கு நிர்யணம் செய்யப்பட்டதில் ரூ. 3 கோடிக்கு அதிகமான தொழில் கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றிற்கு சம்பந்தப்பட்ட கழகங்களின் மூலம் கடன் தொகை விடுவிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடனுதவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக அதிக அளவில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்படவில்லை. இந்தக் குறையை போக்க பொதுமக்கள் எளிதாக கடனைப் பெற தற்போது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கல்விக் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடப்பாண்டில் ரூ. 6 கோடி கல்விக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டத் துறை மூலமாகவும் விவசாயிகள் பெண்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு தொழிற்கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இதுவரையில் சுமார் ரூ. 499 கோடி கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் மேல்படிப்பை தொடர கல்வி கடனுதவிகளை எளிதில் பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல முகாம் அனைத்து வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் சேரும் கல்வி நிறுவனத்தைப் பொருத்து கல்விக் கடனுதவிகள் வழங்கப்படுகிறன. வெளிநாடுகளில் படிப்புகளை மேற்கொள்ளவும் வங்கிகள் கடனுதவிகளை வழங்குகிறது. படிப்பு முடித்த பிறகு கடனைத் திரும்ப செலுத்த வங்கிகள் தெரிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். எனவே இந்த விழிப்புணர்வு முகாமை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொண்டு பயன்பெறும் வகையிலே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
முகாமில் மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தராஜ், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொது மேலாளர் மாதையன், கனரா வங்கி முதன்மை மேலாளர் அனில்குமார், முன்னோடி வங்கிகளின் மேலாளர் முருகேசன் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com