ஜி.கே. உலகப் பள்ளியில் மாதிரி ஐ.நா. மாணவர் மாநாடு

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாணவர் மாநாடு வேலூர் அத்தியாயம் 3' என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாணவர் மாநாடு வேலூர் அத்தியாயம் 3' என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, பள்ளியின் செயல் இயக்குநர் வினோத் காந்தி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சந்தோஷ் காந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரஷிதா ஸ்ரீ குமார் வரவேற்றார். இளம் பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத் மாதிரி மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டு வரும் சர்வதேச பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று சர்வதேச இயற்கை கூட்டமைப்பு, தேசிய பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்து, அவை தீர்மானங்களாக நிறைவேற்றி ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்ப உள்ளனர்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சி.நேரு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com