100-ஆவது நாளில் அடியெடுத்து வைக்கும் ஆம்பூர் உணவு வங்கி

ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவைக்காக தொடங்கப்பட்ட ஆம்பூர் உணவு வங்கி திங்கள்

ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவைக்காக தொடங்கப்பட்ட ஆம்பூர் உணவு வங்கி திங்கள்
கிழமை (ஜூன் 18) 100 ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது.
ஆம்பூர் பகுதியில் சாலையோரம் வாழும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நாளில் ஒரு வேளையாவது உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம்பூர் உணவு வங்கி தொடங்கப்பட்டது. ஆம்பூர் மகளிர் காவல் நிலையம் எதிரே தொடங்கப்பட்ட ஆம்பூர் உணவு வங்கியின் நிர்வாகிகளான பாபு, பிரபுதாஸ் ஆகியோர் முதலில் தங்களுடைய சொந்த செலவில் தங்களால் முடிந்த அளவுக்கு உணவை தயாரித்து ஒரு சிலருக்கு மட்டுமே உணவு வழங்கி வந்தனர். இவர்களுடைய செயல்பாடுகளை தினமும் பார்த்த சில சமூக ஆர்வலர்கள் தாங்களும் இதற்கு உதவுகிறோம் என்று அவர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆம்பூர் உணவு வங்கி குறித்த தகவல் ஆம்பூர் பகுதியில் பரவத் தொடங்கியவுடன் பலரும் தங்களுடைய பங்களிப்பை பொருளாகவும், உடல் உழைப்பாகவும் அளித்து வருகின்றனர்.
தினமும் சுமார் 100-இல் இருந்து 120 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.  உணவைத் தயாரித்து அதை பொட்டலம் கட்டி எடுத்துச் சென்று வழங்கப்படுகிறது. 
ஆம்பூர் நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் இதற்காக காய்கறிகளை தினமும் இலவசமாக வழங்கி வருகின்றனர். பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள்களில் சம்பந்தப்பட்டவர்கள் நாங்கள் உணவு வழங்குகிறோம் என்று ஆம்பூர் உணவு வங்கிக்கு உதவி செய்ய முன்வருகின்றனர். சிலர் அவர்களே உணவை தயாரித்து எடுத்துச் சென்று உணவு வங்கியில் வழங்கிவிடுகின்றனர். 
மேலும் துணி, போர்வைகள் ஆகியவற்றையும் சேகரித்தும் வழங்கும் சேவையையும் செய்து வருகின்றனர். பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து உணவு வங்கி செயல்பட பொதுமக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது என ஆம்பூர் உணவு வங்கியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.   
ஆம்பூர் உணவு வங்கி மூலம் தங்களுடைய பங்களிப்பை அளிக்க 72990 06922, 97910 24330 ஆகிய செல்லிடப்பேசிகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com