நாட்டறம்பள்ளிக்கு நிரந்தர வருவாய் ஆய்வாளரை நியமிக்கக் கோரிக்கை

நாட்டறம்பள்ளிக்கு நிரந்தர வருவாய் ஆய்வாளர் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளிக்கு நிரந்தர வருவாய் ஆய்வாளர் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி தாலூகாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அம்மணாங்கோயில் வருவாய் உள் வட்டங்கள் உள்ளன. நாட்டறம்பள்ளி வருவாய் உள்வட்டத்துக்கு நாட்டறம்பள்ளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர், வெள்ளநாயக்கனேரி, மல்லகுண்டா, ஆத்தூர்குப்பம், சின்னமோட்டூர், பெத்தகல்லுபள்ளி உள்ளிட்ட பல வருவாய்க் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித் தொகை, வாரிசு சான்று மற்றும் வருவாய் சான்று உள்ளிட்டவற்றைப் பெற மனு அளித்து, அவற்றைப் பெற்று வருகின்றனர். 
இந்நிலையில், கடந்த மாதம் இங்கு பணி புரிந்து வந்த வருவாய் ஆய்வாளர் யமுனா இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி நாட்டறம்பள்ளி வருவாய்  உள்வட்டத்துக்கு பொறுப்பு வருவாய் ஆய்வாளராகச் செயல்பட்டு வருகிறார். 
இந்நிலையில் அவர், நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவகத்துக்கு சரிவர வராததால் பெரும்பாலான நேரம் அலுவலகம் மூடியே கிடக்கிறது. இதனால், சான்றிதழ் கேட்டு வருபவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்வதாகவும், மேலும் அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர் அலுவகத்துக்குச் சென்று ஆவணங்களுடன் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
எனவே, நாட்டறம்பள்ளி வருவாய் உள்வட்டத்துக்கு நிரந்தரமாக வருவாய் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com