பொன்விழா கொண்டாடும் நாட்டு நலப்பணி அமைவு: எம்எல்ஏ பெருமிதம்

மாணவர்களிடையே ஆளுமைப் பண்பை உருவாக்கும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு தற்போது பொன்விழாவை

மாணவர்களிடையே ஆளுமைப் பண்பை உருவாக்கும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு தற்போது பொன்விழாவை கொண்டாடுகிறது என கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன் கூறினார். 
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், பரசுராமன்பட்டியில் நடைபெறும் 7 நாள் சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது: 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட அமைவு பொன்விழா ஆண்டில்  பொலிவுடன் நிற்கிறது. இந்த அமைவு முதலாவதாக பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம், இந்த அமைவை மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தியது. இந்த அமைவில் தங்களை இணைத்துக் கொள்ளும் மாணவர்கள் சமுதாயத்தில் உன்னத நிலையை அடைகின்றனர். இந்த மாணவர்கள் இளம் வயதிலேயே சமூகம் சார்ந்த சுகாதாரம், சுற்றுச்சூழல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற அறப்பணிகளை மேற்கொள்கின்றனர். 
இந்த அமைவு சார்பில் ஆண்டுதோறும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்தல், செப்பனிடுதல், பயிற்சி வகுப்புகள்- மருத்துவ முகாம்கள் நடத்துதல், தங்களின் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற அறப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இவர்கள் மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். 
இந்த முகாமில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இக் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வீடுகள்- சாலைகள்தோறும், பொதுஇடங்களிலும் மரக்கன்றுகள் நடுவதை ஊக்கப்படுத்துங்கள் என்றார்.
முகாம் தொடக்க விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் 
கோ.புருஷோத்தமன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் தமிழ்திருமால் வரவேற்றார். மாவட்டத் தொடர்பு அலுவலர் எல்.சீனிவாசன், கோவிந்தாபுரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வி.ராமு, ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கோபிநாத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். உதவித் திட்ட அலுவலர் எஸ். கலைச்செல்வன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com