ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.
 இதுகுறித்து அந்த சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுக்கான சமூக இணக்க அளவுகோல் முறையில் மாவட்டத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.
 அதன்படி, மாவட்டத் தலைவராக சுரேஷ், செயலராக சிவலிங்கம், பொருளராக கண்ணதாசன், மாவட்ட மகளிர் அணி தலைவியாக வித்யா, செயலராக உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளராக தமிழ் மலர், மாவட்ட அவைத் தலைவராக பார்ச்திபன், பிரசார செயலராக வடிவேல், தலைமை நிலையச் செயலராக மேரி, செய்தி தொடர்பாளராக ஜெயசீலன், மாவட்ட தணிக்கையாளராக அகத்தியன், பொதுக்குழு உறுப்பினர்களாக நந்தகுமார், அசோக், தமிழரசு, சீனிவாசன், கங்காதரன், நாகராஜன், சிவக்குமார், செந்தில்குமார், கண்ணன், பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதேவன், ரமேஷ்குமார், நரசிம்மராஜலட்சுமி, குமரன், குப்புசாமி, வெங்கடேசன், ரவி, குமரவேல், ஜெயராமன், மகேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், 1,885 ஆசிரியர் பயிற்றுநர்களை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும். பணியிட மாறுதலுக்கு பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com